கொவிட்-19 தடுப்பு சுகாதார அதிகாரிகளின் நடைமுறைகளான முகக் கவசங்களை அணிதல், சமூக இடைவெளியை பேணல், கை கழுவுதல் போன்றவற்றைத் தொடருமாறு பொதுமக்களிடம் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் கொவிட் 19 பரவுவதை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அளித்த ஆதரவுக்கு கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புத் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நன்றி தெரிவித்தார்.
நாட்டில் பரவிவரும் கொவிட்-19 கட்டுப்பாட்டுப் பணிகள் குறித்து ஊடகவியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பொது சுகாதார அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள், முப்படையினர் உட்பட அனைத்து பங்காளர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார். எமது நாட்டில் கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடைசியாக கொவிட்-19 வைரஸ்சால் பாதிக்கப்பட்ட இலங்கையர் பதிவானார்.
ஆனால் வெளிநாட்டு வருகைகள் காரணமாக தொடர்ந்து அவ்வப்போது வைரஸ்சால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகின்றனர். அவர்கள் பெரும்பாலும் இலங்கையின் சகோதரர்கள், ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் தலையீட்டால் திருப்பி அழைக்கப்படுகிறார்கள். அவர்களை அதிகபட்ச சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கவனித்துக் கொள்வது நமது கடமையாகும்.
படையினரால் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தனிமைப்படுத்தல் மையங்களிலும் அவர்களை கண்கானித்து கொள்வதில் முழுமையாக ஈடுபடுகின்றன.
எனவே, நாம் அன்றாட சுகாதார நடைமுறைகள் குறித்து நன்கு விழிப்புடன் இருப்பதுடன், நமது சமூகத்தின் சிறந்த நலன்களுக்காக அந்த வழிகாட்டுதல்களைத் தொடர வேண்டியது அவசியம் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment