(எம்.மனோசித்ரா)
இலங்கை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (லங்கா ஐ.ஓ.சி) எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திற்கு எவ்வித அறிவித்தலும் விடுக்கவில்லை எனத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, சிபெட்கோ எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (லங்கா ஐ.ஓ.சி) கடந்த 17 ஆம் திகதியிலிருந்து ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 5 ரூபாவினால் அதிகரித்திருக்கிறது. இது தொடர்பில் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ஐ.ஓ.சி நிறுவனம் எவ்வித அறிவிப்பும் இன்றியே இவ்வாறு எரிபொருள் விலையை அதிகரித்திருக்கிறது. சிபெட்கோ எரிபொருள் விலையும் அதிகரிக்கப்படுமா என்று பலர் எம்மிடம் வினவுகின்றனர். அதன் விலையை அதிகரிப்பதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை.
ஐ.ஓ.சி. நிறுவனம் பற்றி எம்மால் எந்த தீர்மானமும் எடுக்க முடியாது. அது எமது பொறுப்பிலுள்ள நிறுவனம் அல்ல. அதன் காரணமாகவே அந்நிறுவனம் எவ்வித அறிவிப்பும் இன்றி எரிபொருள் விலையை அதிகரித்திருக்கிறது. இந்த நிறுவனத்தை எம்மால் ஒரு ஒழுங்கு முறைக்கு கொண்டுவர முடியாது.
நான் அறிந்த வகைளில் இந்நிறுவனம் விலை தொடர்பான தீர்மானங்களை நிதி அமைச்சிற்கே அறிவிக்கும். எனினும் அவர்களுக்கு விலை தொடர்பில் தீர்மானிப்பதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment