(நா.தனுஜா)
தற்போதைய நெருக்கடி நிலையில் வெளிநாடுகளுடனான உறவை வலுப்படுத்துவது அவசியமாகும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருக்கிறார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக நாடுகள் பலவற்றினதும் செயற்பாடுகள் முடங்கியிருக்கின்றன. இத்தருணத்தில் வெளிநாடுகளுடனான உறவை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து முன்னாள் சபாநாயகர் மேலும் கூறியிருப்பதாவது,
தற்போது காணப்படும் நெருக்கடி நிலையில் வெளிநாடுகளுடனான உறவை வலுப்படுத்துவது அவசியமாகும். அது மாத்திரமன்றி முதலீடுகளை ஊக்குவித்தல், வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் ஏனைய துறைகளில் ஒத்துழைப்பினை மேம்படுத்தல் ஆகியவற்றிலும் அவதானம் செலுத்த வேண்டும். இந்த நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு பொருத்தமான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment