புத்தளம் மற்றும் பாலாவி ஆகிய பகுதிகளிலுள்ள மாதா சொரூபங்கள் மீது இனந்தெரியாதோரால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புத்தளம் புனித மேரிஸ் தேவாலயம் மற்றும் பாலாவி தேவாலயம் ஆகியவற்றிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலினால் ஆலயங்களின் முன்பாக மாதா சொரூபங்கள் வைக்கப்பட்டிந்த கண்ணாடிக் ௯ண்டுப் பகுதி சேதமடைந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (18.05.2020) இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த புத்தளம் பொலிஸார், நேற்று செவ்வாய்க்கிழமை (19.05.2020) மோப்ப நாய்களின் உதவியுடன் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் சோதனைகளை முன்னெடுத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment