குவைத்தில் வேலை வாய்ப்புக்காக சென்று, அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் 466 பேர், குவைத் விமான சேவைக்கு சொந்தமான 02 விசேட விமானங்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவர்களில் முதல் தொகுதியினர், நேற்று (19) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததோடு, அதில் 287 பேர் அடங்கியிருந்தனர்.
இரண்டாவது தொகுதியினரில் 179 பேர், நேற்று நள்ளிரவு குவைத்திலிருந்து விசேட விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தனர்.
குவைத்தில் சட்டவிரோதமாக சுமார் 19,000 இலங்கையர்கள் தங்கியுள்ளதோடு, அவர்களுக்கு நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக குவைத் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்புக் காலத்தை பயன்படுத்தி இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு திரும்பும் இலங்கையர்களுக்காக, குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தினால், தற்காலிக கடவுச்சீட்டு தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்திலிருந்து இவ்வாறு வருகை தந்த அனைவரும், தொற்றுநீக்கம் செய்யப்பட்டு, தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment