களு கங்கை, ஜிங் கங்கை மற்றும் நீல்வளா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டமானது இன்று காலை முதல் குறைந்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு மழை வீழ்ச்சி குறைவாக பதிவாகியுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக இரத்தினபுரி, பத்தேகம மற்றும் நெலுவா பகுதிகளிலும் வெள்ள நீர் குறைவடையத் தொடங்கியுள்ளது.
எனினும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 9 மாவட்டங்களுக்கு வழங்கிய மண்சரிவு எச்சரிக்கையானது தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, கண்டி, நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று மாலை 6 மணியுடனான நிலவரப்படி, தொடரும் சீரற்ற காலநிலைக் காரணமாக நாட்டின் 9 மாவட்டங்களில் 2487 குடும்பங்களைச் சேர்ந்த 9,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்தும் உள்ளனர். மேலும் 8 வீடுகள் முழுமையாகவும் 586 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment