அருள் பொழியும் ஈகைத் திருநாளில் இறை ஆசிகளை யாசிப்போம் - பெருநாள் வாழ்த்துச் செய்தியில் காதர் மஸ்தான் - News View

Breaking

Post Top Ad

Saturday, May 23, 2020

அருள் பொழியும் ஈகைத் திருநாளில் இறை ஆசிகளை யாசிப்போம் - பெருநாள் வாழ்த்துச் செய்தியில் காதர் மஸ்தான்

வரலாற்றில் ஒரு வித்தியாசமான காலமொன்றில் எம்மை வந்தடைந்துள்ள இந்த புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை மிகவும் அமைதியான முறையில் ஆரவாரமின்றி அமைதியாக அனுஷ்டிக்குமாறு முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது இன்றைய காலகட்டத்தில் கொரோணா தொற்று நோயின் பரவலையும் அதன் தாக்கத்தையும் குறைப்பதற்காக சுகாதார பிரிவினர் வழங்கியிருக்கும் அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் இயன்றளவு பின்பற்றுமாறும் கூடியளவு சமூக இடைவெளிகளை பேணி நடப்பதுடன் பெருநாள் விளையாட்டுக்களை முற்றாக தவிர்ப்பதுடன் வீடுகளில் தரித்திருந்து நல் அமல்களில் ஈடுபடுமாறும் உங்களை நான் அன்பாக வேண்டிக் கொள்கிறேன்.

மேலும் புனித இஸ்லாமானது அமைதி,இரக்கம்,ஒற்றுமை மனித நேயம் என்பனவற்றையே அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை நாம் திட்டமாகவும் உறுதியாகவும் அறிந்து வைத்துள்ளோம். இல்லாவிட்டால் இஸ்லாம் உலகளாவிய ரீதியாக இவ்வாறு வளர்ந்திருக்க முடியாது.

இன்று எமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையில் நாம் பொறுமை, ஜீவகாருண்யம், பரஸ்பர அன்பு ஆகிய குணவியல்புகள் மூலம் எமது ஒற்றுமை மிக்க தாய் நாட்டை கட்டியெழுப்ப திடசங்கம் பூணுமாறு உங்களை அன்பாக கேட்டுக்கொள்வதோடு

பொறுமையின் மாதமாகிய இந்த புனித ரமழானில் நாம் எடுத்துக் கொண்ட பயிற்சிகளை செய்துவந்த இபாதத்துகளை தொடர்ந்து செய்வதுடன் வசதியற்றிருக்கும் எம் சகோதரர்களை இனங்கண்டு தானதர்மங்களை செய்து அல்லாஹ்வின் நல்லருளைப் பெற்ற நல்லடியார்களாக மாறுவோமாக!!!

No comments:

Post a Comment

Post Bottom Ad