தேசிய கண் ஆஸ்பத்திரி சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 20, 2020

தேசிய கண் ஆஸ்பத்திரி சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம்

சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுடன் தேசிய கண் ஆஸ்பத்திரியின் சிகிச்சைகளை மீண்டும் ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொவிட்-19 தொற்று காரணமாக சன நெரிசல் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு வைத்தியசாலை களின் சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

எனினும் தற்போது இதன் சேவைகளை சமூக இடைவெளி மற்றும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அதன் பணிப்பாளர் டொக்டர். டபிள்யூ.எல்.யூ.பி குமாரதிலக்க தெரிவித்தார். 

இதற்கமைய சிகிச்சை பெறவுள்ளோர் தமது வைத்தியரை தொலைபேசியூடாக தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment