(இரா.செல்வராஜா)
தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவை கோரப்போவதில்லை என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேர்தலை நடாத்தும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கே உள்ளது என அரசாங்க அதிகாரிகள் சங்கத்தின் பிரதிப் பொதுச் செயலாளர் வைத்தியர் நவிந்த சொய்ஸா தெரிவிக்கிறார்.
நாட்டின் தற்போதைய நிலையில தேர்தல் நடாத்துமாறு சிபாரிசு செய்வீர்களா எனக் கேட்டபோது இந்த விவகாரத்தில் தாம் தலையிடப்போவதில்லை என வைத்தியர் நவிந்த சொய்ஸா தெரிவித்தார்.
தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல்கள்கள் திணைக்களத்திற்கே உள்ளது. அதில் நாம் தலையிடப்போவதில்லை, தேர்தலை நடாத்துமாறு சிபாரிசு செய்யவோ கோரிக்கை விடுக்கவோ போவதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment