பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் அனுமதிக்கான விண்ணப்பங்களை உறுதிசெய்வதற்கான கால எல்லை நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 24, 2020

பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் அனுமதிக்கான விண்ணப்பங்களை உறுதிசெய்வதற்கான கால எல்லை நீடிப்பு

பல்கலைக்கழங்களில் இணைவதற்கு தகுதியான மாணவர்களின் நுழைவு விண்ணப்பப்படிவங்களை உறுதிப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட கால எல்லை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இம்மாதம் 27ஆம், 28ஆம் 29ஆம் திகதிகளில் விண்ணப்பப்படிவங்களை உறுதிப்படுத்த முடியுமென, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

க.பொ.த. உயர்தரத்தில் சித்தியடைந்து, பல்கலைக்கழகத்திற்கு நுழைவதற்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களின் விண்ணப்பப்படிவங்கள், பாடசாலைகளின் அதிபர் அல்லது, உப அதிபரினால், உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்று, கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது. 

இதற்கு முன்னர் 20ஆம், 21ஆம், 22ஆம் திகதிகளில் இதற்கான திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment