ஐக்கிய தேசியக் கட்சி மோசடிகார, ராஜபக்ஷக்களுடன் டீல் அரசியலில் ஈடுபடும் நபர்களின் கையில் சிக்குண்டுள்ளது - News View

About Us

About Us

Breaking

Thursday, May 28, 2020

ஐக்கிய தேசியக் கட்சி மோசடிகார, ராஜபக்ஷக்களுடன் டீல் அரசியலில் ஈடுபடும் நபர்களின் கையில் சிக்குண்டுள்ளது

(செ.தேன்மொழி) 

ஐக்கிய தேசியக் கட்சி மோசடிகார மற்றும் ராஜபக்ஷக்களுடன் டீல் அரசியலில் ஈடுபடும் நபர்களின் கையில் சிக்குண்டுள்ளது. இதனால் அதனை பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன, அவர்களின் செயற்பாடுகளால் மிகவும் நெருக்கடிக்குள்ளானவன் என்ற வகையில் அவர்களது செயற்பாடுகள் தொடர்பில் நன்கறிந்தவன் தான் எனவும் குறிப்பிட்டார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஐக்கிய தேசியக் கட்சி கடத்தல் கார குழுவினரின் கையில் சிக்குண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை உண்மையாக பின்பற்றுபவர்கள் இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொணடுள்ளனர். 

ராஜபக்ஷாக்களுடன் டீல் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் இந்த குழுவினர் எப்போதுமே ஐக்கிய தேசியக் கட்சியின் திறமைமிக்க அரசியல் தலைவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றுவதையே செய்துவந்தனர். அவர்களது செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பலர் வேறு வழியின்றி ராஜபக்ஷாக்களுடனே இணைந்து கொண்டுள்ளனர். இவர்கள் தற்போது தங்களே சிறிகொத்தாவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் உரிமையாளர்கள் என்று தெரிவித்து வருகின்றனர். 

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பெருந்தொகையான உறுப்பினர்கள் இன்று ஐக்கி மக்கள் சக்தியுடனே இணைந்துள்ளனர். சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவே அனுமதி வழங்கியிருந்தது. தற்போது தங்கள் கூட்டணி அமைப்பதற்கே அனுமதி வழங்கியதாகவும், நாங்கள் பொதுக் கூட்டணி அமைக்காது தனியொரு கட்சியை உறுவாக்கியிருப்பதாகவும், போலி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். 

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருடன் இணைந்து அமைத்த பொதுக் கூட்டணியும் கட்சியாகவே பதிவு செய்யப்பட்டது. தற்போது எங்களை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும், செயற்குழுவின் அங்கத்துவத்திலிருந்தும் நீக்கியுள்ளதாக குறிப்பிட்டு எமக்கு கடிதங்கள் அனுப்பி வருகின்றனர். எமக்கு தற்போது இந்த கடிதங்களால் எந்த பயணும் கிடைக்கபோவதில்லை. அவை தொடர்பில் நாங்கள் அக்கறை செலுத்துவதும் கிடையாது. 

ஒழுக்காற்று நடவடிக்கை என்னும் பெயரில் திறமைமிக்க உறுப்பினர்களை கட்சியிலிருந்து செல்வதற்கு அனுமதித்த இவர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்ற போது எங்கிருந்தார்கள் என்பதை நாட்டிலிலுள்ள அனைவரும் அறிவார்கள். அன்றிலிருந்து இன்று வரை இவர்கள் ராஜபக்ஷாக்களுடன் டீல் செய்வதையே நோக்காக கொண்டு செயற்பட்டார்கள். 

இவ்வாறான மோசடிக்கார குழுவிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியை காப்பாற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரையும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். 

இந்த குழுவின் பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் தொடர்ந்தும் கட்சித்தாவது ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தவன் என்ற வகையில் அவர்களது செயற்பாடுகள் தொடர்பில் நன்கறிந்தவன் நானே. அதனால் இந்த நபர்களிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியை காப்பாற்ற வேண்டியது எமது கடமையாகும்.

No comments:

Post a Comment