கொரோனாவால் உலக பொருளாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தல் - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஆசிய அபிவிருத்தி வங்கி - News View

Breaking

Post Top Ad

Saturday, May 16, 2020

கொரோனாவால் உலக பொருளாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தல் - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஆசிய அபிவிருத்தி வங்கி

கொரோனா வைரஸ் தொற்றினால் உலக பொருளாதாரத்திற்கு 5.8 முதல் 8.8 டிரில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை ஆசிய அபிவிருத்தி வங்கி வெளியிட்டுள்ளது. 

இந்த தகவலை ஆசிய அபிருத்தி வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் யசுயுகி சவாடா கூறியுள்ளார். 

இது கடந்த மாத கணிப்பை விட இரண்டு மடங்கு அதிகமாகும், என்பதுடன் இந்த தொகை உலகின் பொருளாதார உற்பத்தியில் 6.4% -9.7% ஆகும். 

இந்த புதிய பகுப்பாய்வு கொவிட்-19 இன் மிக முக்கியமான சாத்தியமான பொருளாதார தாக்கத்தின் பரந்த தாக்கத்தை முன்வைக்கிறது. 

பொருளாதாரங்களுக்கு ஏற்படும் சேதத்தைத் தணிக்க கொள்கை தலையீடுகள் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்பதையும் இது எடுத்துக் காட்டுவதாக யசுயுகி சவாடா சுட்டிகாட்டியுள்ளார். 

கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலகெங்கிலும் பொருளாதார நிலைமைகள் தொடர்ந்தும் முடக்க நிலையில் உள்ளது. எனினும் உலகளாவிய தலைவர்கள் தங்கள் பொருளாதார வீழ்ச்சியை தடுக்க பெரிதும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad