நாளை ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை மீறுபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை - பிரதி பொலிஸ்மா அதிபர் - News View

Breaking

Post Top Ad

Saturday, May 16, 2020

நாளை ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை மீறுபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை - பிரதி பொலிஸ்மா அதிபர்

நாளை ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு கடுமையான அமுல்படுத்தப்படும் என சிஸே்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோகன தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை எவரும் வீடுகளில் இருந்து வெளியே செல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவினை மீறுபவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை நாளை முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கம்பஹாவில் ஊரடங்கு உத்தரவு இன்னமும் நடைமுறையில் உள்ளதால் இந்த பகுதிகளில் அடுத்த வாரம் முதல் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவாமலிருப்பதை உறுதி செய்வதற்காக மக்கள் சமூக விலக்கல் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சில பகுதிகளில் திடீர் சோதனைகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad