தளர்வுகளை முன்னெடுத்தால் நாட்டில் தேர்தலையல்ல வேறு எதனையும் முன்னெடுக்க முடியாது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, May 25, 2020

தளர்வுகளை முன்னெடுத்தால் நாட்டில் தேர்தலையல்ல வேறு எதனையும் முன்னெடுக்க முடியாது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை

(எம்.மனோசித்ரா) 

தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று என்னால் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் தனிமைப்படுத்தல் கட்டளை சட்டத்தை வலுப்படுத்தாமல் சாதாரண சூழலை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்காமலும் சமூக இடைவெளியைப் பேணுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காமலும் இருந்தால் அடுத்த மூன்று வாரங்களில் நாட்டில் தேர்தல் மாத்திரமல்ல. வேறு எதனையும் முன்னெடுக்க முடியாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று என்னால் தெரிவிக்கப்பட்டுள்ளமை உண்மையாகும். 

எனினும் தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது ஏதேனுமொரு முறையில் நாம் தனிமைப்படுத்தல் கட்டளை சட்டத்தை வலுப்படுத்தாமல் சாதாரண சூழலை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்காமலும் சமூக இடைவெளியைப் பேணுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காமலும் இருந்தால் அடுத்த மூன்று வாரங்களில் நாட்டில் தேர்தல் மாத்திரமல்ல. வேறு எதனையும் முன்னெடுக்க முடியாது. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 

அரச தரப்பினர் மாத்திரமல்ல எதிர்த்தரப்பினர் உள்ளிட்ட அனைவரும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். அரச ஊடக நேர்காணலில் மாத்திரமல்ல. தனியார் ஊடகத்திற்குச் சென்றாலும் நான் இதனை வலியுறுத்துவேன். 

தயவுசெய்து எம்மை அரசியல்வாதிகளின் கூட்டுக்குள் திணிக்க வேண்டாம். காரணம் நாம் அரசியலில் ஈடுபடுவதில்லை. 30 வருடங்கள் மிகுந்த சிறமங்களுக்கு மத்தியில் அரச துறையில் செயற்பட்டுள்ளோம். 

இதன்போது பல்வேறு சவால்களுக்கும் முகங்கொடுத்துள்ளோம் அவ்வாறு சவால்களுக்கு முகங்கொடுத்த சந்தர்ப்பங்களில் அவற்றிலிருந்து தப்பியோடவில்லை ஆனால் நாம் எந்த சந்தர்ப்பத்திலும் அரசியல்வாதிகளுக்கோ அல்லது அரசியல் கட்சிகளுக்கோ கீழ் படிந்ததில்லை. 

எனவே அரசியல் நோக்கங்களுக்காக செயற்படாத அரச அதிகாரிகள் காணப்பட்டால் அவர்களை தமது அரசியல் நோக்கத்திற்குள் உள்ளீர்க்க வேண்டாம் என்று கோருகின்றோம். அரசியல் ரீதியான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்துவதற்காக எம்மை அசௌரியத்திற்கு உள்ளாக்க வேண்டாம்.

No comments:

Post a Comment