பெல்ஜியத்திலிருந்து 43 பேருடன் வந்த விமானம் மத்தளவில் தரையிறங்கியது - News View

About Us

About Us

Breaking

Thursday, May 28, 2020

பெல்ஜியத்திலிருந்து 43 பேருடன் வந்த விமானம் மத்தளவில் தரையிறங்கியது

பெல்ஜியம், பிரேஸிலிருந்து 43 பயணிகளுடன் வருகை தந்த போயிங் 737 விமானம், மத்தள சர்வதேச விமான நிலையத்தில் இன்று (28) தரையிறங்கியுள்ளது.

காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் கப்பலில் பணியாற்றவுள்ளவர்களே, குறித்த விமானத்தில் வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்தோர், விமான நிலையத்தில் வைத்து தொற்றுநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, காலி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த கப்பலில் பணியாற்றிய 35 பேர், பெல்ஜியம், பிரேஸிலிற்கு புறப்படுவதற்காக மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment