வட கொரியா மற்றும் தென் கொரிய படையினர் இரு நாடுகளையும் பிளவுபடுத்தும் இராணுவ மயமாக்கப்பட்ட எல்லையில் பரஸ்பர துப்பாக்கிச் சூட்டினை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டுள்ளனர்.
வட கொரிய இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டின் காரணத்தினாலேயே பதில் தாக்குதலை தென் கொரியா மேற்கொண்டதாக சியோல் தெரிவித்துள்ளது.
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின், உடல் நலம் குறித்து வெளியான செய்திகளினால், வட கொரியாவின் ஸ்தரத்தன்மை தொடர்பில் அச்சங்கள் எழுந்தது.
எனினும் மூன்று வாரங்களின் பின்னர் கிம் ஜொங் உன், முதல் முறையாக பொதுவெளியில் தோன்றியுள்ளதாக வட கொரியா அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்ட ஒரு நாளின் பின்னர் இந்த பரஸ்பர துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழப்புகள் எவையும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாவில்லை.
No comments:
Post a Comment