போயிங் 767-300 ER என்ற சிறப்பு விமானமொன்று நெதர்லான்தின், ஆம்ஸ்டர்டாமிலிருந்து சுமார் 230 பயணிகளுடன் இன்றைய தினம் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த விமானத்தில் வருகை தந்தவர்கள் காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள ஒரு கப்பலின் பணியாளர்களாக கடைமையாற்றுபவர்கள் என்றும், அதன் காரணமாக மனிதாபிமான அடிப்படையில் விமான நிலையத்திற்கு வர குறித்த விமானம் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குறித்த பயணிகளிடம் விமான நிலையத்தில் வைத்து வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டதுடன், கிருமி நீக்கம் செய்யப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் பஸ் மூலமாக காலி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலிலிருந்து 53 பேர் நெதர்லாந்துக்கு புறப்படுவதற்கு மாத்தள விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டும் உள்ளனர். அவர்கள் இன்று இரவு மத்தள விமான நிலையத்திற்கு வருகை தந்த போயிங் விமானத்தில் நாட்டை விட்டு வெளியறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment