19 ரயில்களை நாளை முதல் சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 17, 2020

19 ரயில்களை நாளை முதல் சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானம்

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலானது, அன்றாட வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ரயில் பயணிகளிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ள கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் 19 ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. 

இதுவரையில் 11 ஆயிரத்து 500 பேர் ரயிலில் பயணம் செய்ய அனுமதி கோரியுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார். 

இதற்கமைவாக, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு 19 அலுவலக ரயில் சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நாவலப்பிட்டியிலிருந்து கண்டிக்கும் மாத்தளையிலிருந்து கண்டிக்குமாக இந்த ரயில் சேவைகள், இடம்பெறவுள்ளன. 

இதேபோன்று பொல்காவலையிலிருந்து கண்டிக்கும் மாத்தறையிலிருந்து காலிக்குமிடையிலும் இதற்கு முன்னர் இடம்பெற்ற ரயில் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார். 

இதேவேளை பணிகளின் நிமித்தம் செல்பவர்கள் தங்கள் நிறுவங்களின் முகாமையாளர்கள் மூலம் ரயில்வே திணைக்களத்தில் சிறப்பு அனுமதி பெற்ற பின்னர் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment