இலங்கையில் 10ஆவது கொவிட்-19 நோய் காரணமான மரணம் பதிவாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி குவைத்திலிருந்து வந்த பயாகலையைச் சேர்ந்த 51 வயதான பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குறித்த பெண்ணுக்கு திடீரென மாரடைப்பு நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாகவும், பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த பெண் இருதய நோயினால் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக கடந்த மே மாதம் 04ஆம் திகதி 8ஆவது கொரோனா மரணம் பதிவாகியிருந்ததோடு, அது இலங்கையில் கொரோனாவினால் மரணமடைந்த முதலாவது பெண் மரணமாக பதிவானது.
அதனைத் தொடர்ந்து 9ஆவது மரணமாக இரண்டாவது பெண் மரணம் பதிவானதோடு, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை தவறானது எனத் தெரிவிக்கப்பட்டு அவரது மரணம் தொடர்பில் சர்ச்சைகளும் ஏற்பட்டிருந்தது.
அதற்கமைய, தற்போது மரணமான பெண் உள்ளிட்ட, இலங்கையில் இறுதியாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்த 3 பேரும் பெண்களாக காணப்படுகின்றனர்.
இலங்கையில் கொரோனா தொற்று காரணமான மரணங்கள்
01. ஆவது மரணம் கடந்த மார்ச் 28ஆம் திகதி, 60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
02. ஆவது மரணம் கடந்த மார்ச் 30ஆம் திகதி, நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர்.
03. ஆவது மரணம் ஏப்ரல் 01ஆம் திகதி, 73 வயதான மருதானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
04. ஆவது மரணம் ஏப்ரல் 02ஆம் திகதி, 58 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
05. ஆவது மரணம், ஏப்ரல் 04ஆம் திகதி, 44 வயதான, ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
06. ஆவது மரணம், ஏப்ரல் 07ஆம் திகதி, 80 வயதான, தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
07. ஆவது மரணம், ஏப்ரல் 08ஆம் திகதி, 44 வயதான, கல்கிஸ்ஸையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
08. ஆவது மரணம், மே 04ஆம் திகதி, 72 வயதான, குருணாகல், பொல்பிதிகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
09. ஆவது மரணம், மே 05ஆம் திகதி, 52 வயதான, கொழும்பு 15, மோதறையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
10. ஆவது மரணம், மே 25ஆம் திகதி, 51 வயதான, குவைத்திலிருந்து வந்த, பயாகலையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
No comments:
Post a Comment