பிரிட்டனில் ஒன்பது நாட்களில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கொரோனா சிறப்பு மருத்துவமனை - News View

About Us

About Us

Breaking

Saturday, April 4, 2020

பிரிட்டனில் ஒன்பது நாட்களில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கொரோனா சிறப்பு மருத்துவமனை

பிரிட்டனில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 9 நாட்களில் மிகப்பெரிய மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது.

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், பிரிட்டனையும் விட்டு வைக்கவில்லை. நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, பல்வேறு பகுதிகளில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன. 

அவ்வகையில், பிரிட்டனில் தீவிர சிகிச்சை தேவைப்படும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக மிகப் பெரிய மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. 
கிழக்கு லண்டனில் இருக்கும் எக்செல் எனப்படும் கண்காட்சி அரங்கம்தான், தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. 4000 படுக்கை வசதிகள் கொண்ட அந்த நைட்டிங்கேல் மருத்துவமனை ஒன்பதே நாட்களில் கட்டப்பட்டுள்ளது. 

இந்த மருத்துவமனை நேற்று திறக்கப்பட்டு, செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதில் வென்டிலேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 

பாதுகாப்பு படைகள், சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆகியோரின் உதவியோடு இந்த மருத்துவமனை மின்னல் வேகத்தில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment