சீனாவில் நாய், பூனை இறைச்சி சாப்பிடவும், விற்கவும் தடை - News View

About Us

About Us

Breaking

Saturday, April 4, 2020

சீனாவில் நாய், பூனை இறைச்சி சாப்பிடவும், விற்கவும் தடை

சீனாவில் உள்ள ஷென்சென் நகரம், நாய், பூனை இறைச்சியை சாப்பிடுவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளது.

சீனாவில், கண்ட கண்ட உயிரினங்களின் இறைச்சியை சாப்பிடும் பழக்கம் இருப்பதால்தான், கொரோனா வைரஸ் உருவானதாக நம்பப்படுகிறது.

அந்த பாதிப்பில் இருந்து சீனா மீண்டு வரும் நிலையில், சீனாவில் உள்ள ஷென்சென் நகரம், நாய், பூனை இறைச்சியை சாப்பிடுவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளது. இந்த தடை, மே 1 ஆம் திகதியில் இருந்து அமலுக்கு வருகிறது.

நாய், பூனை இறைச்சிக்கு தடை விதிக்கும் முதலாவது நகரம், ஷென்சென் தான். இம்முடிவுக்கு ‘ஹுயுமன் சொசைட்டி இன்டர்நேஷனல்’ என்ற விலங்குகள் நல அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. 

இதன்மூலம், சீனாவில் ஆண்டுக்கு ஒரு கோடி நாய்களும், 40 லட்சம் பூனைகளும் கொல்லப்படுவது நிறுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment