உலக சுகாதார ஸ்தாபனம் சீனாவிற்கு ஆதரவானது என அமெரிக்க ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் குறித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்வுகூறல்கள் பிழையானவையாகவே எப்போதும் காணப்பட்டுள்ளன எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பொக்ஸ் நியுசிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பிரஜைகள் சீனாவிற்கு செல்வதற்கு தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் ஜனவரியில் தெரிவித்தது பெரும் தவறு என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம் சீனா சார்பானது, ஆரம்பம் முதல் அது சீனா குறித்து சாதகமான விடயங்களையே தெரிவித்து வந்துள்ளது, என தெரிவித்துள்ள டிரம்ப் நீங்கள் எல்லைகளை மூட வேண்டாம் என அவர்கள் பரிந்துரை செய்தனர் அதனால் பேரழிவு ஏற்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தெரிவித்த அனைத்தும் தவறாகியுள்ளது, அவர்கள் கொரோனா வைரஸ் எங்கிருந்து வந்தது என்பதை தெரிவிக்கவில்லை, பல வருடங்களாக நாங்கள் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு நிதி வழங்கி வருகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவிற்கும் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து ஐக்கிய நாடுகளும் கவலையடைந்துள்ளது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் பிழையானதாக மாறியுள்ளது அந்த நடவடிக்கைகள் சீனாவிற்கு ஆதரவானவையாக காணப்பட்டுள்ளன என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment