கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வரும் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என சர்வதேச தலைவர்கள் பலர் தெரிவித்து வருகின்ற நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் விரைவில், குணம் பெற வேண்டுமென ஆசீர்வதிப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் பிரித்தானிய பிரதமர் குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment