தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்றை எவ்வாறு கூட்ட முடியும் ? - அரசாங்த்தினால் நாணயத்தாள்களை அச்சிட முடியாது - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்றை எவ்வாறு கூட்ட முடியும் ? - அரசாங்த்தினால் நாணயத்தாள்களை அச்சிட முடியாது

(எம்.மனோசித்ரா) 

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பொதுத் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு பாராளுமன்றத்தைக் கூட்ட முடியும். இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு கோருவது ஒழுக்கமற்றதும் சட்டத்துக்கு புறம்பானதுமாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரச்சார செயலாளர் ரஞ்சித் சியம்பலாபிட்டி தெரிவித்தார். 

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பொதுத் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் எவ்வாறு பாராளுமன்றத்தைக் கூட்ட முடியும் ? இதிலுள்ள ஒழுக்க விதிமுறை என்ன? அதற்கான அவசியம் என்ன ? 

உலகில் எந்த நாட்டிலும் இல்லாதவாறு இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள சுமார் 60 இலட்சம் மக்களில் நூற்றுக்கு 80 வீதமான மக்களுக்கு நேரடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 

அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் முன்னரே வழங்கப்பட்டது. அதேபோன்று ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. சமூர்த்தி பயனாளிகள், நீரிழிவு நோயாளர்கள், முதியவர்கள், அங்கவீனமுற்றவர்கள் என ஒவ்வொரு தரப்பினருக்கும் வெவ்வேறாக கொடுப்பனவுகள் வழங்கக்கப்பட்டன. 

அரச வருமானம் கேள்விக்குறியாகியுள்ள நிலையிலேயே அரசாங்கத்தினால் இந்த கொடுப்பனவுகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. 

அரச வருமானம் என்பது நூற்றுக்கு 95 வீதம் வரி மூலமாகவே கிடைக்கப் பெறுகிறது. இந்த வரி வருமானத்துக்கு இக்குறுகிய காலத்தில் பாரிய சவால் ஏற்பட்டது. ஆனால் அரசாங்கம் முழுமையாக மக்களைப் பற்றி சிந்தித்தே அனைத்து தீர்மானங்களையும் எடுத்தது. 

மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று கோஷமிட்டவர்கள் தற்போது இது சிக்கல் என்று கூறுகின்றனர். அவ்வாறு எந்த சிக்கலும் கிடையாது. அரசாங்த்தினால் தமது விருப்பத்திற்கு ஏற்ப நாணயத்தாள்களை அச்சிட முடியாது. அதிகளவாக நாணயத்தாள்களை அச்சிட்டு அரசாங்கம் செலவுகளை முன்னெடுப்பதாக ஒருவர் கூறுவாரானால் அவர் அரச நிதி சட்டம் பற்றி அறியாதவராகவே இருக்க வேண்டும். 

எமக்கு புதிதாக நாணயத்தாள்களை அச்சிட வேண்டுமானால் அதற்கு மத்திய வங்கி அனுமதியளிக்க வேண்டும். நாட்டுக்கு தேவையான பணத்தை அச்சிடுவதற்கே அனுமதியளிக்கப்படும். 

எனினும் இதனை அரசியல் தரப்பில் இருவாராகப் பேசுகின்றனர். ஒருபுறம் நிவாரணம் வழங்குமாறு கூறுகின்றனர். நிவாரணம் வழங்கிய பின்னர் சட்ட விரோதமாக பணம் அச்சிடப்படுவதாகக் கூறுகின்றனர். தேர்தல் காலத்தில் எதிர்க்கட்சியினரால் இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுவது சாதாரணமானதாகும் என்றார்.

No comments:

Post a Comment