யாழ் மாவட்டத்தில் சிறிய நடுத்தர தொழிற்சாலைகளை மீள இயக்க முடியும் எனத் தெரிவித்துள்ள யாழ்ப்பாண வணிகர் கழகம் உற்பத்தியாளர்கள் தங்கள் மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதில் தடைகள் ஏற்படுமாயின் வணிகர் கழகத்திடம் அல்லது யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக தொடர்பு கொண்டு அதனை நிவர்த்தி செய்யலாம். குறிப்பாக சுகாதார திணைக்களத்தின் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே இதனை மேற்கொள்ள முடியும் என யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் உப தலைவர் இ.ஜெயசேகரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருடன் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகளின் உற்பத்திகள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது இதன்போது குறித்த விடையங்கள் ஆராயப்பட்டு வர்த்தகர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டதுடன் உள்ளூர் உற்பத்தியாளர்களும் தங்கள் உற்பத்திகளை மேற்கொள்வதற்கான தடைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் இயங்குகின்ற அனைத்துத் தொழிற்சாலைகளும் அச்சுவேலி தொழிற்பேட்டை உட்பட அனைத்து வகையான தொழிற்சாலைகளையும் இயக்குவதற்கு எத்தகைய தடையும் இல்லை. இவர்கள் மீள இயங்குகின்றபோது சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி இயக்க முடியும்.
மேலும் தங்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதில் தடங்கல் ஏற்படுமாயின் யாழ்ப்பாண வணிகர் கழகத்திடமோ அல்லது அரசாங்க அதிபரிடமோ தொடர்புகளை மேற்கொண்டால் அதனைப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி பத்திரமுதல் கொண்டு அனைத்து விதமான தடைகளையும் நிவர்த்தி செய்து கொள்ளமுடியும் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment