ஒரு சிலரின் நடவடிக்கையால் யாழிற்கு பொருட்களை கொண்டு செல்லும் போது ஆனையிறவில் சோதனை - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

ஒரு சிலரின் நடவடிக்கையால் யாழிற்கு பொருட்களை கொண்டு செல்லும் போது ஆனையிறவில் சோதனை

(எம்.நியூட்டன்) 

உரிய அனுமதியின்றி பாரவூர்தியில் வந்தமையினால் ஆனையிறவு சோதனைச்சாவடியில் பொருட்கள் ஏற்றி இறக்கிய பின்னரே செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என யாழ்ப்பாண வணிகர் கழகம் அறிவத்துள்ளது. 

ஒரு சிலரின் நடவடிக்கை காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக வணிகர் கழகம் அறிவித்துள்ளது. 

நேற்று முன்தினம் அத்தியாவசிய சேவையைப் பெற்று கொழும்பில் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து தப்பி பாரவூர்தியில் வட பகுதிக்கு வந்தவர்களின் நடவடிக்கை காரணமாக மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாதுகாப்பு தரப்பினர் யாழ். மாவட்டத்திற்கு உள்ளும் யாழ். மாவட்டத்திற்கு வெளியேயும் செல்லும் அனைத்துப் பொருட்களையும் இறக்கி சோதனை செய்த பின்னரே மீளவும் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்படும் என பாதுகாப்பு தரப்பினர் வணிகர் கழகத்திற்கு தெரிவித்துள்ளனர். 

இனிவரும் நாட்களில் அனுமதியை பெற்றுச் செல்லும் அனைவரும் தங்கள் அனுமதிக்கு ஏற்ற வகையிலேயே அதனைப் பயன்படுத்த வேண்டும் இதுவரை காலமும் இந்த நெருக்கடி இல்லாத நிலையில் நேற்று முதல் இந்த நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கு நாங்கள் எதுவும் செய்து கொள்ள முடியாது. பாதுகாப்பே முக்கியமானது அரசாங்கம் மற்றும் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே பொருத்தமானதாகவும் என வணிகர்கழகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment