மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் - இன்று முதல் சென்னையில் வீடுவீடாக சோதனை - News View

About Us

About Us

Breaking

Sunday, April 5, 2020

மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் - இன்று முதல் சென்னையில் வீடுவீடாக சோதனை

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பணியாளர்களை பயன்படுத்தி சென்னையில் வீடுவீடாக சோதனை நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளதாக மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. 

தமிழ் நாட்டில் கொரோன வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையிலேயே மாநில அரசாங்கம் இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது. 

பயிற்றுவிக்கப்பட்ட 16,00 சுகாதார தொழிலாளர்களை பயன்படுத்தி வீடுவீடாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. 

பாதுகாப்பு உடைகளுடன் நடவடிக்கையில் இறங்கவுள்ள சுகாதார பணியாளர்கள் சென்னையை 24 மணி நேர கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பார்கள் நாளாந்த அறிக்கைகளை சமர்ப்பிப்பார்கள் என மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. 
அடுத்த 90 நாட்களுக்கு சென்னையின் பத்து இலட்சம் கட்டிடங்களில் வசிப்பவர்களை கண்காணிக்கும் நடவடிக்கை இடம்பெறும் என மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் நால்வர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை மகாராஸ்டிராவிற்கு அடுத்ததாக இந்தியாவில் அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழ் நாடு காணப்படுகின்றது.

மாநிலத்தில் 485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், சனிக்கிழமை புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் 75 அடையாளம் காணப்பட்டுள்ளனர். சென்னையில் 88 நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டவர்களில் 473 பேர் புதுடில்லி மசூதிக்கு சென்றவர்கள் என குறிப்பிட்டுள்ள மாநிலத்தின் சுகாதார செயலாளர் பீலா ராஜேஸ் சென்னையிலிருந்து 1500 பேர் கலந்துகொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment