மத்திய கிழக்கு உள்ளிட்ட ஏனைய நாடுகளில் சிரமங்களை எதிர்கொண்டுள்ள 45 ஆயிரம் இலங்கையர்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 5, 2020

மத்திய கிழக்கு உள்ளிட்ட ஏனைய நாடுகளில் சிரமங்களை எதிர்கொண்டுள்ள 45 ஆயிரம் இலங்கையர்கள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மத்திய கிழக்கு உட்பட வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுடன் வெளியுறவு அமைச்சின் செயலாளர் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

இதன்போது மத்திய கிழக்கு உட்பட ஏனைய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுமார் 45,000 இலங்கையர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதுடன், அவர்களில் பெரும்பாலானோர் தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

இத்தகைய இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பு, தொழில் வாய்ப்புகள் உள்ளிட்ட விடயங்களை அந்தந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகங்களும், தொழிற்சங்கங்களும் கவனம் செலுத்தி வருவதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

இதேவளை கொரோனா பரவல் காரணமாக நாட்டில் விமானங்கள் உள் நுழைவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளமையினால் இவர்களை நாட்டுக்கு அழைத்துவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment