கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்திலிருந்து வெளியேறியோரை தனிமைப்படுதலில் வையுங்கள் - மத்திய மாகாண ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Friday, April 3, 2020

கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்திலிருந்து வெளியேறியோரை தனிமைப்படுதலில் வையுங்கள் - மத்திய மாகாண ஆளுநர்

கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்திலிருந்து வந்த 2453 நபர்களையும் தனிமைப்படுத்தலில் வைக்குமாறு  மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார். 

கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிந்த மலையக தொழிலாளர்கள் 2453 பேர் வருகை தந்திருந்த நிலையில் அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி தொற்று நோய் குறித்த பரிசோதனைகளை முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார். 

மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற தேயிலைத் தோட்ட அதிகாரிகளுடனான சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை அடுத்து நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை அடுத்து கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் பணி புரியும் நபர்கள் குறித்து மாற்று நடவடிக்கை வேலைத்திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் வலியுறுத்தியிருந்தது. 

அதற்கமைய கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் பணி புரிந்த மலையக பகுதிகளைச் சேர்ந்த பணியாளர்கள் கடந்த தினங்களில் தத்தமது பகுதிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. 

மத்திய மாகாண இளைஞர், யுவதிகள் 2453 பேர் இவ்வாறு கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் இருந்து வருகை தந்திருந்த நிலையில் அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி தொற்று நோய் குறித்த பரிசோதனைகளை முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார். 

குறிப்பாக கொரோனா வைரஸ் பரவல் நாடு பூராகவும் பரவும் அச்சுறுத்தல் நிலைமை உள்ளதாக சுகாதார மருத்துவ சங்கங்கள் அதிகாரிகள் தெரிவித்து வருகின்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், தொற்று நீக்கள் செயற்பாடுகளில் ஈடுபபடுத்தப்பட்டால் பின்னர் மக்கள் எந்தவித அச்சமும் இல்லாது வாழ முடியும்.

உடனடியாக தொற்று நீக்கும் முகாம்களுக்கு அனுப்பவோ அல்லது தமது பிரதேசத்தில் பாதுகாப்பான விதத்திலேனும் இந்த கண்காணிப்பு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment