வெளிநாட்டு ராஜதந்திரிகள் இருவர் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமுடன் தொலைபேசியில் உரையாடல் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

வெளிநாட்டு ராஜதந்திரிகள் இருவர் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமுடன் தொலைபேசியில் உரையாடல்

வெளிநாட்டு ராஜதந்திரிகள் இருவர் நேற்று (22), ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களை தனித்தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளனர். 

அமெரிக்கத் தூதுவர் அலய்னா பி. டெப்லிட்ஸ் மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சரா ஹுல்டன் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுடன், நாட்டின் தற்போதைய சமூக, அரசியல் சூழ்நிலை, சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இங்கு உலக அளவிலான கொவிட்-19 இன் தாக்கம் என்பனவற்றை மையப் படுத்திக் கலந்துரையாடியுள்ளனர்.

சட்டத்தின் ஆட்சி உரிய முறையில் நிலைநாட்டப்பட வேண்டியதன் அவசியம், பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஜனநாயக விழுமியங்களைப் பேணுவதில் ஏனைய நாடுகளிலிருந்து பகிர்ந்து கொள்ள வேண்டிய அனுபவம் என்பன பற்றியும் பேசப்பட்டது.

No comments:

Post a Comment