இரண்டாவது சுற்று ஆபத்து குறித்த அச்சத்தில் சில ஆசிய நாடுகள் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 2, 2020

இரண்டாவது சுற்று ஆபத்து குறித்த அச்சத்தில் சில ஆசிய நாடுகள்

கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டம் வெற்றியளிக்க தொடங்கியுள்ளது என நம்பிக்கை கொள்ளத்தொடங்கிய ஆசிய நாடுகள் இரண்டாம் சுற்று வைரசினை எதிர்கொள்கின்றன என கார்டியன் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. 

எல்லைகள் மூடப்படுவதற்கு முன்னர் தங்கள் நாடுகளுக்கு செல்ல வேண்டும், தனிமைப்படுத்தல் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக தங்கள் நாடுகளுக்கு செல்லமுயல்பவர்களினால் ஆசிய நாடுகள் இரண்டாம் சுற்று வைரசினால் பாதிக்கப்படுகின்றன என கார்டியன் தெரிவித்துள்ளது. 

ஆசிய நாடுகளில் மீண்டும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது அறிகுறிகள் அற்ற நோயாளர்கள் காரணமாக மீண்டும் சமூக பரவல் அச்சம் தோன்றியுள்ளதையடுத்து பல ஆசிய நாடுகள் மீண்டும் கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன என கார்டியன் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரசிற்கான மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பும் என எதிர்பார்க்க முடியாது என கனடா பல்கலைகழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

வைரசினால் நாளொன்றிற்கு பத்து பேருக்கு மேல் பாதிக்கப்படாத ஹொங்கொங் தற்போது வெளிநாடுகளில் இருந்து பலர் தாயகம் திரும்பிய பின்னர் நாளொன்றிற்கு 50 நோயாளிகள் இனம் காணப்படும் நிலையை எட்டியுள்ளது. 

கொரோனா வைரசிற்கான உலகின் சிறந்த உதாரணமாக கருதப்பட்ட சிங்கப்பூர் இரண்டாவது சுற்று ஆபத்தினை எதிர்கொள்கின்றது. 

சிங்கப்பூர் அலட்சியமாக காணப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுகளின் மத்தியில் கடந்த நான்கு வாரத்தில் நால்வர் பலியாகியுள்ளதுடன் 1100 பேர் நோய் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து சிங்கப்பூர் கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

தென்கொரியாவில் இரண்டாவது சுற்று வைரஸ் குறித்த அச்சம் காணப்படும் அதேவேளை சீனாவில் வெளிநாடுகளில் இருந்து தாய் நாடு திரும்பியவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் காரணமாக அச்சம் தோன்றியுள்ளது

No comments:

Post a Comment