பிரேசிலில் பழங்குடி இனப் பெண்ணும் வைரசால் பாதிக்கப்பட்டார் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 2, 2020

பிரேசிலில் பழங்குடி இனப் பெண்ணும் வைரசால் பாதிக்கப்பட்டார்

அமேசான் காடுகளில் உள்ள பழங்குடி இன மக்களுக்கும் கொரோனா வைரஸ் ஏற்படத் தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க கொரோனா வைரஸ் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் பரவி வருகிறது. 

இந்த நிலையில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தற்போது பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் பழங்குடி இன மக்களுக்கும் கொரோனா வைரஸ் ஏற்படத் தொடங்கி உள்ளது. அமேசான் காடுகளில் மொத்தம் 300க்கும் அதிகமான பழங்குடி இனத்தவர் குழுக்கள் உள்ளன. இதில் பல இலட்சம் மக்கள் இருக்கிறார்கள். இவர்கள் வெளியுலகுடன் தொடர்பில் இல்லை. வெகு சிலர் மட்டும் வெளியே சென்று பணிகளைச் செய்கிறார்கள்.

அப்படி பணி செய்யும் பெண் ஒருவருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது . 20 வயது நிரம்பிய கொக்காமா பழங்குடி குழுவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா வந்துள்ளது. அமேசான் காட்டில், பிரேசில் தலைநகரில் இருந்து சுமார் 850 கி.மீ தூரத்தில் இவர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். இங்குள்ள பெண்ணுக்குத்தான் கொரோனா வந்துள்ளது.

பிரேசில் மருத்துவர் ஒருவர் மூலம் இவருக்கு கொரோனா வந்துள்ளது. பிரேசில் மருத்துவர் ஒருவர் இந்த மாகாணத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் பிரேசில் சென்று மீண்டும் காட்டிற்குத் திரும்பிய இவருக்கு கொரோனா வந்தது. அவரிடம் தாதியாக பணி புரியும் இந்த பழங்குடி பெண்ணுக்கும் கொரோனா பரவி உள்ளது.

கொக்காமா என்பது அமேசானில் இருக்கும் பெரிய பழங்குடி குழுக்களில் ஒன்றாகும். இதில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இருக்கிறார்கள். கொலம்பியா, பெரு ஆகிய நாடுகளில் எல்லை வரை இவர்கள் விரிந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் இனம் அழிந்து வரும் இனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பெண்ணின் குடும்பத்திற்கும் கொரோனா அறிகுறி உள்ளது. இதனால் அந்த இனத்தில் பலருக்கு கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு கொரோனா பரவினால் அங்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம். அங்கு மருத்துவ வசதிகள் மிக மிக குறைவு ஆகும். 

அமேசான் காடுகளில் இருக்கும் பழங்குடி மக்களை அங்கிருந்து அனுப்ப, பிரேசில் அரசு தீவிரமாக முயன்று வருகிறது. அங்கிருக்கும் காடுகளை பயன்படுத்த அந்நாட்டு வலதுசாரி அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதனால் வரிசையாக அங்கு நிறைய திட்டங்களை அந்நாட்டு அரசு அறிவித்தது. தற்போது அந்த மக்களை மேலும் என் துன்புறுத்தும் விதமாக அங்கு வைரஸ் தாக்குதல் வேறு வந்துள்ளது.

No comments:

Post a Comment