ராணுவ சட்டத்தை கொண்டு வருவேன் - கிளர்ச்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Friday, April 24, 2020

ராணுவ சட்டத்தை கொண்டு வருவேன் - கிளர்ச்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி

பிலிப்பைன்சில் ராணுவ சட்டத்தை கொண்டு வரவுள்ளதாக கிளர்ச்சியாளர்களை ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டர்டே கடுமையாக எச்சரித்துள்ளார்.

பிலிப்பைன்சில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், மணிலா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மே 15ம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு அரசு சார்பில் பணம் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

அவ்வகையில் கிராம மக்களுக்கு பணம் மற்றும் உணவு வழங்கும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக சென்ற இரண்டு வீரர்களை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் இந்த படுகொலையை செய்ததாக ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டர்டே குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில், ஜனாதிபதி டுட்டர்டே தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, ராணுவ சட்டத்தை கொண்டு வர வேண்டியிருக்கும் என கிளர்ச்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

‘ராணுவம் மற்றும் பொலிசாருக்கு எதிராக தாக்குதல் நடத்தும் ஒவ்வொருவரையும் எச்சரிக்கிறேன். இப்படி நடந்தால் ராணுவ சட்டத்தை பிரகடனம் செய்வேன். இதில் பின்வாங்க மாட்டேன். எனக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. சட்டப்பூர்வ அமைப்பு உட்பட உங்கள் அனைவரின் கதையையும் முடிக்க முயற்சிப்பேன். அப்போது நீங்கள் ஓடி ஒளிய வேண்டும்’ என ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதியின் குற்றச்சாட்டுகளை கிளர்ச்சியாளர்கள் மறுத்துள்ளனர். அத்துடன் தொற்று நோயை சமாளிக்க கிராம மக்களுக்கு உதவி செய்வதாகவும் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment