கல்குடா கொவிட் 19 சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பினால் இரண்டாயிரம் குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, April 24, 2020

கல்குடா கொவிட் 19 சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பினால் இரண்டாயிரம் குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கி வைப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித்

கல்குடா கொவிட் 19 ரமழான் கால நிவாரணப்பணிகளுக்கான சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பினால் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நோன்பை முன்னிட்டு உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று 24.04.2020ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.


அந்த வகையில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் ஒன்பது கிராம சேகவர் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 2027 குடும்பங்களுக்கு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மைதானத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
சமூக நிறுவனங்களின் கூட்டமைபின் தலைவரும் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.ரிஸ்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.றமீஸா மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கல்குடா ஜம்இய்யதுல் உலமா, ஸகாத் நிதியம், பிரதான பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், வர்த்தக சங்கங்கள், உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியம் ஆகியவைகள் ஒன்றிணைந்து கொவிட் 19 ரமழான் கால நிவாரணப் பணிகளுக்கான சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பினை உருவாக்கி கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment