கொரோனா தொற்றிலிருந்து இலங்கை மின்சார சபை சேவையாளர்கள், ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உடை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இலங்கை மின்சார சபையினால் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு ஆடையை இலங்கை மின்சார சபையின் ஹட்டன் காரியாலயத்தில் 02.04.2020 அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
மின்சார வேவையாளர்கள் மின்சார அவசர தேவை நேரங்களில் பொதுமக்கள் நிறைந்த பகுதிகளுக்கு செல்கிற போது அவர்களுக்கான பாதுகாப்பு கருதியே மேற்படி ஆடை தயாரிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை அதிகாரி தெரிவித்தார்.
கடமை நிமித்தம் வெளியில் சென்று திரும்பும் மின்சார சபை சேவையாளர்களை தொற்று நாசினி தெளித்து உள்வாங்குவதுடன் அவர்கள் பயணித்த வாகனத்திற்கு தொற்று நாசி தெளித்து பாதுகப்பை உறுதிபடுத்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலையக நிருபர் இராமச்சந்திரன்
No comments:
Post a Comment