அம்பாறை, உஹண, தமண பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (23) இரவு குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பொலிஸ் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அது அகற்றப்பட்டுள்ளது.
வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றும் பல கடற்படை வீரர்கள் விடுமுறையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள உஹண, தமண சென்றுள்ள நிலையில், குறித்த பொலிஸ் பிரிவுகளுக்குள் நுழைவது மற்றும் வெளியேறுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனரத்ன இதனைத் தெரிவித்தார்.
வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியமை நேற்று உறுதிப்பட்டிருந்ததை அடுத்து, குறித்த முகாமிலுள்ள அனைவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக, கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி ஷவேந்திர சில்வா நேற்று (23) இரவு தெரிவித்திருந்தார்.
அதற்கமைய, அங்கிருந்து விடுமுறையில் சென்ற அனைவரையும் மீள அழைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment