(எம்.மனோசித்ரா)
சர்வதேச ஜனநாயக ஒன்றியம் (IDU) ஏற்பாடு செய்த ‘கொவிட் -19 இற்கு கொள்கை மற்றும் விஞ்ஞான பதில்’ குறித்த மெய்நிகர் மாநாடு வைரஸுக்கு எதிரான போரில் மீட்சியில் சர்வதேச சமூகத்துடனான மேலதிக ஈடுபாட்டிற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இம்மாடு தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சர்வதேச ஜனநாயக ஒன்றியம் (IDU) ஏற்பாடு செய்த ‘கொவிட் -19 இற்கு கொள்கை மற்றும் விஞ்ஞான பதில்’ குறித்த மெய்நிகர் மாநாட்டில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்தது.
IDU என்பது இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா, தென் கொரியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிரேசில் உள்ளிட்ட உலகம் முழுவதிலுமுள்ள அரசியல் கட்சிகளின் தொகுப்பாகும்.
2005 முதல் அதன் துணைத் தலைவராக பணியாற்றிய நான், IDUவுடன் ஈடுபடுவதால் இலங்கை பெறக்கூடிய நன்மைகளை முதலில் கண்டேன்.
இந்த தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கு உலகளாவிய தலைமைத்துவத்தின் தேவையை ஊக்குவிப்பதற்கான ஒரு தளத்தை இந்த அமைப்பு எமக்கு வழங்குகிறது.
வைரஸுக்கு எதிரான போரில் மற்றும் கொவிட்-19 இற்குப் பின்னரான மீட்சியில் சர்வதேச சமூகத்துடனான மேலதிக ஈடுபாட்டிற்கான சந்தர்ப்பத்தையும் அது வழங்குகின்றது.
இந்த நெருக்கடி நேரத்தில் தமது சார்ந்த நாடுகளில் தலைமைத்துவத்திற்கு ஏஞ்சலா மேர்க்கல் மற்றும் எர்னா சோல்பர்க் ஆகியோரைப் பாராட்ட இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
IDU இல் சோல்பர்க் மற்றும் மேர்க்கல் ஆகியோரின் கட்சிகளின் உறுப்புரிமை ஏனைய அனைவருக்கும் மதிப்பு மிக்கதாகும்.
No comments:
Post a Comment