இலங்கை முஸ்லீம் சமூகத்தின் பாதுகாப்பு குறித்த கரிசனை அதிகரித்துள்ளது - மனித உரிமைகள் கண்காணிப்பகம் - News View

About Us

About Us

Breaking

Friday, April 24, 2020

இலங்கை முஸ்லீம் சமூகத்தின் பாதுகாப்பு குறித்த கரிசனை அதிகரித்துள்ளது - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கை அதிகாரிகள் உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும், சமீபத்தில் கைது செய்யப்பட்ட முஸ்லீம் சமூகத்தை சார்ந்தவர்கள் சட்டத்தரணிகளை தொடர்புகொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பான கொள்கையொன்றை அரசாங்கம் வெளியிட்ட பின்னர் இடம்பெற்றுள்ள கைதுகள் இலங்கையின் முஸ்லீம் சிறுபான்மையினத்தவரின் பாதுகாப்பு குறித்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 

கடந்த வருடம் இடம்பெற்ற மிகவும் கொடுரமான உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகளிற்கு காரணமானவர்களை நீதி விசாரணைகளிற்கு உட்படுத்த வேண்டும் எனினும் கைதுகள் சட்டபூர்வமானவையாக காணப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார். 

நன்கறியப்பட்ட முஸ்லீம்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளமையும், அரசாங்கத்தின் பக்கச்சார்பான நடவடிக்கைகளும், முஸ்லீம்களிற்கு எதிராக அதிகரிக்கும் குரோத பேச்சுகளும் பரந்துபட்ட முஸ்லீம் சமூகத்தின் பாதுகாப்பு குறித்த கரிசனைகளை எழுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கையின் அனைத்து மக்களும் எதிர்கொள்ளும் கொரோனா வைரஸ் ஆபத்து இலங்கை அரசாங்கம் நாட்டில் இன உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது என தெரிவித்துள்ள அவர் பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அதிகாரிகள் பாரபட்சமற்ற முறையில் செயற்படுகின்றனர் என்ற தோற்றம் உருவாகுவது முக்கியமானது, எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீரகேசரி

No comments:

Post a Comment