நேபாளத்திலிருந்த மாணவர்கள் இலங்கையை வந்தடைந்தனர் - News View

About Us

About Us

Breaking

Friday, April 24, 2020

நேபாளத்திலிருந்த மாணவர்கள் இலங்கையை வந்தடைந்தனர்

உயர் கல்வியை தொடர்வதற்காக சென்று, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேபாளத்தில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 93 பேர் இன்று (24) இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

UL 1124 எனும் இலக்கம் கொண்ட விசேட விமானத்தின் மூலம், இன்று (24) பிற்பகல் 3.27 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்துள்ளனர். 

குறித்த விமானம், இன்று காலை 8.00 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, நேபாளின் காத்மண்டு நோக்கிப் புறப்பட்டிருந்தது.

இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக குறித்த விமானத்தில் விமான சேவை பணியாளர்கள் 08 பேர் பயணித்திருந்ததோடு, இன்று பிற்பகல் 1.05 மணியளவில் காத்மண்டுவிலிருந்து குறித்த விமானம் புறப்பட்டது.

இந்தியாவில் சிக்கியுள்ள மாணவர்களை அழைத்து வருவதற்காக மற்றுமொரு விசேட விமானம் நாளையதினம் இந்தியாவின் மும்பாய் நோக்கி புறப்படவுள்ளது.

வெளிநாடுகளில் சிக்கிய இலங்கையர்களை மீட்கும் மூன்றாவது விசேட விமானப் பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment