தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்தவர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, April 24, 2020

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்தவர் உயிரிழப்பு

கொரோனோ வைரஸ் சந்தேகத்தில் கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்டு யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர், யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணம், கொடிகாமம் விடத்தற்பளை கொரோனோ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இதில் எம்.அ. நசார் என்ற நபர் காய்ச்சல் காரணமாக கடந்த 22 ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதற்கமைய கடந்த 23ஆம் அவருக்கு தொற்று ஏதும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு (23) அவர் வைத்தியசாலையிலையே உயிரிழந்துள்ளார். இவரது குடும்பத்தினரும் கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்திலேயே தற்போது தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும் கொரோனோ சந்தேகத்தில் அவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தாலும், அவருக்கு கொரோனோ தொற்று இல்லை என்றும் மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

(நிதர்சன் விநோத், தவராஜ் சபேசன்)

No comments:

Post a Comment