(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (யுனிசெப்) சிறுவர்களை தொடர்புப்படுத்தி ஏற்பாடு செய்துள்ள விசேட செயற்திட்டத்தில் இலங்கை சார்பில் திட்டத்தை செயற்படுத்த இலங்கை சிறுவர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்ட அரச தலைவர் என்ற அடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் முழு உலக வாழ் மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சிறுவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே சிறுவர்களை ஒன்றிணைத்து பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உளவியல் ரீதியாகவும், இதர பிரச்சினைகளுக்கும் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதே இந்த செயற்திட்டத்தின் நோக்கம்.
இதற்கமைய 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் தங்களின் பிரச்சினைகளை 10 நிமிட காணொளியில் பதிவேற்றம் செய்து அதனை பிரதமரின் உத்தியோகபூர்வ முகப்பு புத்தகத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். பிரச்சினைகளுக்கான தீர்வினை பிரதமர் தனது முகப்பு புத்தகத்தில் பதிவேற்றம் செய்வார்.
காணொளியை பதிவேற்றம் செய்வது தொடர்பில் பிரதமரின் முகப்பு புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரியவர்களாகிய நாம் ஒரு பேரழிவு சூழ்நிலையில் அதிர்ச்சிக்குள்ளாகும் போது, குழந்தைகளின் மனது இன்னும் பிரச்சினைகளை அனுபவிப்பது பொதுவான இயல்பாகும்.
நாட்டின் தலைவராகவும், ஒரு அன்பான தந்தையாகவும், உங்கள் குழந்தைகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் தயாராக இருகிறேன்.
அன்புள்ள குழந்தைகளே,
நீங்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளை 10 வினாடிகள் பதிவு செய்த வீடீயோவை எனக்கு அனுப்புங்கள். என்னிடம் கேட்டிருக்கும், பொதுவான எல்லா கேள்விகளுக்கும் நான் பதிலளிப்பேன்.
உங்கள் வீடீயோவை பதிவு செய்ய கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
1) பிரகாசமான இடத்தை தேர்ந்தெடுங்கள்.
2) கேமராவிற்கும், முகத்திற்குமிடையில் தூரத்தை குறைப்பதன் மூலம், உங்கள் தொலைபேசி அல்லது கணனியை உங்கள் முகத்துக்கு இணையாக வைத்திருங்கள்.
3) பதிவு செய்து முடியும் வரை உங்கள் தோரணையை ஒரே மாதிரியாக வைத்திருங்கள்.
4) உங்கள் வீடீயோவை 10 வினாக்களுக்கு வரம்பிடவும்.
பேஸ்புக் செய்தியாக இந்தக் கணக்கில் உங்கள் வீடீயோவை அனுப்பி வைக்கவும்.
கீழே காணப்படும் பதிவு முறைப்படி உங்கள் பிரச்சினையை பதிவு செய்யுங்கள்.
1) கௌரவமிக்க பிரதமர் அவர்களே,
2) எனது பெயர் (முதல் பெயரைக் குறிப்பிங்கள்.
3) எனது வயது
4) எனது ஊர்
5) எனது பிரச்சினை
No comments:
Post a Comment