தனிமைப்படுத்தல் அறிவித்தல்களை தவறாக சித்திரிக்க வேண்டாம், அவர்களும் எம்மை போன்ற மனிதர்களே - ஹட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 2, 2020

தனிமைப்படுத்தல் அறிவித்தல்களை தவறாக சித்திரிக்க வேண்டாம், அவர்களும் எம்மை போன்ற மனிதர்களே - ஹட்டன் டிக்கோயா நகர சபை தலைவர்

ஹட்டன் நிருபர்

கொரோனா வைரஸ் தொற்று உள்ள பிரதேசங்களுக்கு சென்று வந்தவர்கள் அல்லது தொற்று உள்ளவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்களையே பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் மூலமாக தனிமைப் படுத்தல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தி வருகின்றோம். அப்படியானவர்களின் குடியிருப்புகள் மற்றும் மத வழிபாட்டுத் தலைங்களில் அரசாங்கத்தால் எமக்கு வழங்கப்பட்ட அறிவித்தல் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துகிறோம். அதற்காக அவர்களை வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என அருகில் உள்ளவர்கள் தவறாக கருதக் கூடாது என ஹட்டன் - டிக்கோயா நகர சபைத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். 

இது குறித்து அவர் கூறுகையில், தனிமைப்படுத்தல் செயற்பாடு என்பது ஒரு முன் பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கையாகும். அவர்களுக்கு வைரஸ் தொற்று உள்ளதாக இல்லையா என்பது குறித்து பரிசோதனைகளை நடத்துவதற்கு இங்குள்ள வைத்தியசாலைகளில் வசதிகள் இல்லை. 

அதேவேளை அவசரப்பட்டு அவ்வாறு செய்வதற்கு எமக்கு அதிகாரங்கள் இல்லை. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 14 நாட்களுக்குப்பின்னர் இவ் வைரஸ் அறிகுறிகள் எதுவுமின்றி இருந்தால் அவர்களுக்கான மருத்துவ சான்றிதழ் பொது சுகாதார உத்தியோகத்தரால் வழங்கப்படும். அவர்கள் ஏனையோர் போன்று சகஜமாக நடமாடலாம். 

எனினும் இந்த தனிமைப்படுத்தல் காட்சிப்படுத்தல்களை பலரும் தவறாக எண்ணிக்கொண்டு போலி செய்திகளை பரப்பி வருகின்றனர். தனிமைபடுத்தப்பட்டவர்கள் எம்மை போன்ற மனிதர்களே. அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அர்த்தம் இல்லை. 

ஆகவே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களை ஒதுக்காது அவர்களுக்கு மனரீதியான உளைச்சல்களை கொடுக்காது பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் அவர்களுக்குரிய உதவிகளை அயலவர்கள் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment