எஸ்.எம்.எம்.முர்ஷித்
உலகலாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் இலங்கைக்கும் பரவியுள்ள நிலையில் மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் வைத்தியசாலை மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில், மடட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள, ஓட்டமாவடி - நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்திற்கு வருகை தந்த நோயாளிகளுக்கு கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க உடற்தேற்றி குடிநீரின் வழங்கி வைக்கப்பட்டது.
கொரோனா வைரஸிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் மருந்து வகைகளில் ஒன்றான உடற்தேற்றி குடிநீரினானது, ஆயுர்வேத மத்திய மருந்தகத்திற்கு வருகை தந்த நோயாளிகளுக்கும் கடமை புரியும் ஊழியர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment