வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு திருட்டு - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 7, 2020

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு திருட்டு

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள நான்கு வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ள சம்பவம் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

ஊடரங்குச் சட்ட அமுலில் இருந்த வேளையில், ஓட்டமாவடி தபால் நிலைய வீதியிலுள்ள சில்லறை வியாபார நிலையம், ஒயில் வியாபார நிலையம் என்பவற்றினை உடைத்து சில்லறைப் பொருட்கள் மற்றும் ஒயில் வகைகள், பணம் என்பவற்றுடன் வியாபார நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடீவி கண்காணிப்புக் கமராவினை உடைத்து அதன் உதிரிப்பாகங்களையும் திருடிச் சென்றுள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
திங்கட்கிழமை ஊரடங்குச் சட்டம் இரண்டு மணியளவில் அமுல்படுத்தப்பட்ட போது, வியாபாராத்தினை முடித்து விட்டு உரிமையாளர்கள் வீடு சென்றதாகவும், செவ்வாய்க்கிழமை காலை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நடமாடும் வகையில் வியாபாரம் செய்வதற்கு வியாபார நிலையத்திற்கு வருகை தந்து பார்வையிட்ட போது, வியாபார நிலையம் உடைக்கட்டிருந்ததையடுத்து பொலிஸாருக்குத் தெரிவித்தனர்.

இவ்வியடம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment