எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்கு பெறுமதிமிக்க இரண்டு தெளிகருவிகள் இன்று 07.04.2020 அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் தற்போதைய காலகட்டத்தில் கிருமி அழிப்பு மருந்துகளை விசுறும் பணிகளுக்காக இக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
டய ஸ்டார் நிறுவனத்தின் உரிமையாளர் ஹனீபா நஜீம் ஹாஜியார் இக்கருவிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இது தொடர்பான நிகழ்வு ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி அவலகத்தில் நடைபெற்றது.
வைத்தியதிகாரி எம்.எச்.எம். தாரிக் மற்றும் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல். நௌபர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தன்னார்வ தொண்டர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இக்கருவிகள் மூலமாக பொதுச்சந்தைகள் மற்றும் பொதுக்கட்டங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களுக்கு கொரோனா தடுப்பு கிருமி கொல்லி மருந்து விசுறப்பட்டது.
ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தினால் கொரோனா தடுப்பு பணிகள் தொடராக நடைபெற்று வருகின்ற போதிலும் கிருமி கொல்லி மருந்து விசுறுவதற்கான கருவிகள் பற்றாக்குறையாக இருந்தமை சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து இக்கருவிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment