வீடுகளிலிருந்து மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள விசேட தொழிநுட்ப முறைமை அறிமுகம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 1, 2020

வீடுகளிலிருந்து மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள விசேட தொழிநுட்ப முறைமை அறிமுகம்

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலையில் ஆஸ்பத்திரிகளில் வெளிநோயாளர் பிரிவுகளில் சிகிச்சை பெறுவோர் தமது வீடுகளிலிருந்து மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் விசேட தொழிநுட்ப முறைமை ஒன்றை சுகாதார அமைச்சு அறிமுகம் செய்துள்ளது

oDoc எனும் app ஐ கையடக்க தொலைபேசியில் நிறுவி எந்த ஒரு நோயாளிக்கும் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கை சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு அலுவலகம் மற்றும் சுகாதார அமைச்சின் தகவல் பிரிவின் ஊடாக மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 077 0773333 எனும் தொலைபேசி இலக்கம் மூலமும் oDoc.life எனும் இணையத்தளத்தில் பதிவுசெய்து தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

அதற்கிணங்க மருத்துவரும் நோயாளியும் கையடக்க தொலைபேசியின் ஊடாக தேவையான மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி தொழில்நுட்ப ரீதியான செயற்திட்டத்தை நேரடியாக கண்காணிக்கும் வகையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நேற்று (31) பொரளையிலுள்ள லேடி ரிச்வே சிறுவர் ஆஸ்பத்திரிக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை அவதானித்தார்.

அங்கு குழந்தை நல விஷேட மருத்துவ நிபுணரான அநுருத்த பாதெனிய புதிய செயற்பாடு தொடர்பில் அமைச்சருக்கு தெளிவுபடுத்தியதுடன் அச்சமயம் அநுருத்த பாதெனிய வீடியோ தொழில்நுட்பம் மூலம் சிறுவர் நோயாளி ஒருவரை பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

மேற்படி தொழில்நுட்ப ரீதியான இந்த செயற்திட்டத்தை ஏனைய விசேட ஆஸ்பத்திரிகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய இந்த நிகழ்வில்லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜீ.விஜேசூரிய, அரசாங்க மருத்துவர் சங்கத்தின் டாக்டர் பிரசாத் கொலம்பகே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments:

Post a Comment