பொலிஸில் பதிவு செய்யும் நடைமுறை நண்பகலுடன் நிறைவடைந்தது - வெளிநாட்டிலிருந்து வந்து பதியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 1, 2020

பொலிஸில் பதிவு செய்யும் நடைமுறை நண்பகலுடன் நிறைவடைந்தது - வெளிநாட்டிலிருந்து வந்து பதியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை

வெளிநாடுகளில் இருந்து கடந்த மார்ச் 16 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டிற்குள் வந்தவர்கள் பொலிஸில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் இன்று (01) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்த சகலரும் தம்மை பதிவு செய்துகொள்ள வேண்டியது கட்டாயம் என சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பதிவு செய்யாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் அவ்வாறானவர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

1933 அல்லது 119 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும். 

தங்களை பொலிஸில் பதிவு செய்யத் தவறினால், அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

மார்ச் 16 ஆம் திகதிக்கு முதல் நாட்டுக்குள் வந்தவர்களின் பட்டியல் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர்களால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment