உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில், மருத்துவமனையில் இன்னும் சுமார் 7 லட்சம் மக்கள் உள்ளனர்.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவியுள்ளது.
தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 9 லட்சத்து 35 ஆயிரத்து 957 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47 ஆயிரத்து 245 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 286 பேர் குணமடைந்துள்ளனர்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 6 லட்சத்து 94 ஆயிரத்து 426 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 35 ஆயிரத்து 610 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பின்வருமாறு:-
இத்தாலி - 13,155
ஸ்பெயின் - 9,387
அமெரிக்கா - 5,110
பிரான்ஸ் - 4,032
சீனா - 3,312
ஈரான் - 3,036
இங்கிலாந்து - 2,352
நெதர்லாந்து - 1,173
ஜெர்மனி - 931
சுவிஸ்சர்லாந்து - 488
பெல்ஜியம் - 828
துருக்கி - 277
பிரேசில் - 244
ஸ்வீடன் - 239
போர்ச்சுக்கல் - 187
தென்கொரியா - 169
இந்தோனேசியா - 157
ஆஸ்திரியா - 146
கனடா - 129
டென்மார்க் - 104
No comments:
Post a Comment