36,000 ஊழியர்களை இடைநீக்கம் செய்யவுள்ள பிரிட்டிஷ் எயார்வேஸ்! - News View

About Us

About Us

Breaking

Thursday, April 2, 2020

36,000 ஊழியர்களை இடைநீக்கம் செய்யவுள்ள பிரிட்டிஷ் எயார்வேஸ்!

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக பிரிட்டிஷ் எயார்வேஸ் தனது 45,000 ஊழியர்களில் 36,000 பேரை இடைநீக்கம் செய்யவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. 

இது தொடர்பில் பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் தொழிற்சங்கங்களுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது. 

அதனடிப்படையில் 80 சதவீதமான விமானப் பணியாளர்கள், ஊழியர்கள், பொறியியாலாளர் மற்றும் தலைமை அலுவலகத்தில் பணி புரிபவர்கள் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக பிரிட்டிஷ் எயார்வேஸ் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளது. 

பிரிட்டிஷ் எயார்வேஸ், கொவிட் 19 நெருக்கடி காரணமாக செவ்வாயன்று பிரிட்டனின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான கேட்விக் விமான நிலையத்திலிருந்து விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாகக் கூறியது.

No comments:

Post a Comment