கொரோன வைரஸ் எவ்வாறு பரவியது என்பது குறித்த பல கதைகளின் மையமாக உள்ள வுகானின் ஆய்வுகூடம் குறித்து இரண்டு வருடங்களின் முன்னரே அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
2018 ஜனவரியில் சீனாவிற்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் வுகானின் வைரஸ் தொடர்பான நிறுவகத்தின் ஆய்வுகூடத்தின் பாதுகாப்பின்மை குறித்து எச்சரித்துள்ளனர் என வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
வெளவால்களில் இருந்து கொரோனா வைரஸ் குறித்த ஆபத்தான ஆராய்ச்சிகள் இடம்பெறுகின்றன என அமெரிக்க தூதரக அதிகாரிகள் எச்சரித்தனர் என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தூதரகத்தின் முதலாவது எச்சரிக்கையில் வெளவால்களிற்கும் வைரசிற்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சி குறித்தும், குறிப்பாக மனிதர்களிற்கு பரவக்கூடிய ஆபத்து குறித்தும், சார்ஸ் குறித்த புதிய வைரஸ் ஆபத்து குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்த ஆவணம் தனக்கு கிடைத்துள்ளதாகவும் வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட ஆய்வு கூடத்தின் விஞ்ஞானிகளுடான உரையாடல்களின் போது, புதிய ஆய்வுகூடத்தில் உரிய முறையில் பயிற்றுவிக்கப்பட்ட தொழில்நுட்பவியலாளர்கள் போதியளவிற்கு இல்லை என குறிப்பிட்டனர் என சீனாவிற்கான அமெரிக்க தூதரகத்தின் சூழல் மற்றும் நோய்கள் குறித்த நிபுணர்கள் 2018 இல் தகவல் அனுப்பியுள்ளனர் என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
வுகானில் வெளவாலிற்கும் கொரேனா வைரசிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்த ஆராய்ச்சிகள் இடம்பெறுகின்றன இது ஆபத்தானது என்பதால் வுகான் ஆய்வுகூடத்தில் உள்ள சீன ஆராய்ச்சியாளர்களிற்கு அமெரிக்கா ஆதரவை வழங்க வேண்டும் என அவ்வேளை தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
சீனாவிற்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் சீனாவின் பிரபல வெளவால் ஆராய்ச்சியாளர் ஜி ஜெங்கிலி குறித்தும் 2018 இல் சுட்டிக் காட்டியுள்ளனர். வெளவாலிருந்து பரவக்கூடிய சார்ஸ் போன்ற கொரோனா வைரஸ் மனிதர்களிற்கு தொற்றி சார்ஸ் போன்ற நோய்களை உருவாக்கலாம் எனவும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் எச்சரித்திருந்தனர் என வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக வெளவால்களில் உள்ள சார்ஸ் போன்ற வைரசினை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதும் விலங்குகளில் இருந்து மனிதர்களிற்கு பரவுவது குறித்து ஆராய்வதும் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய கொரோனா வைரஸ் பாதிப்பினை தடுப்பதற்கும் தவிர்ப்பதற்கும் அவசியமானது என சீனாவிற்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் எச்சரித்திருந்தனர் என வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment